தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தைக் கடந்தது

0 1373

தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.

வியாழன் காலை நிலவரப்படி தெலங்கானா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்து 444 ஆக உள்ளது. இவர்களில் 225 பேர் உயிரிழந்தனர்.

நாலாயிரத்து 361 பேர் குணமடைந்துள்ளனர். இதேபோல் கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்தாயிரத்து 118 ஆக உள்ளது.

பாதிக்கப்பட்டோரில் 164 பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர். ஆறாயிரத்து 151 பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திரப் பிரதேசத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. அந்த மாநிலத்தில் பத்தாயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments