செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 197 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 1964

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 197 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நாலாயிரத்து 399 ஆக உயர்ந்துள்ளது.

ஜூன் 19ஆம் தேதிக்கு முன் சென்னையில் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிந்து விட்டுச் செங்கல்பட்டு மாவட்டத்துக்குத் திரும்பியவர்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் குன்றத்தூர், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், பரங்கிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் ஏற்கெனவே தொற்றுள்ளோருடன் தொடர்புடைய 97 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments