கொரோனா பரிசோதனையில் புதிய உச்சம் தொட்ட இந்தியா

0 2482

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 911 மாதிர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அரசு ஆய்வகங்களில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 587 மாதிரிகளும், தனியார் ஆய்வகங்களில் இதுவரை இல்லாத அளவில் 43 ஆயிரத்து 608 மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. மேலும், இதுவரை நாட்டில் சுமார் ஆயிரம் ஆய்வகங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளித்து உள்ளதாகவும், அதில் 730 அரசுக்கு சொந்தமானவை எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments