மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் அமலுக்கு வந்த முழு ஊரடங்கு

0 3586

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு, ஜூன் 30 வரை விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கூடுதலாக தேனி, சின்னமனூர், கம்பம் ,போடி, கூடலூர் ஆகிய நகராட்சிகளிலும் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இப்பகுதிகளில், அத்தியாவசிய கடைகளான மருந்து கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஆகியவை மட்டும், சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments