எகிறும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்ட அச்சம்

0 1444

நாடு முழுவதும் இதுவரை, சுமார் 73 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக ஐ.சி.எம்.ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 15 ஆயிரத்து 968 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்தை தாண்டி விட்டது. மும்பையில், காவல்துறையினர் 185 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

டெல்லியில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 788 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டி விட்டது, தமிழகம், இந்த பட்டியலில் 3- வது இடம் வகிக்கிறது.

குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை
தாண்டியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு 19 ஆயிரத்தையும், ராஜஸ்தானில் 16 ஆயிரத்தையும் நெருங்கி உள்ளது.

மேற்கு வங்காளத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தையும், மத்திய பிரதேசத்தில் 12 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது.

ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா என பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்தது.

கேரளாவில் ஒரே நாளில் 152 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்தை தாண்டியது. அதே போல் கொரோனா உயிர்ப்பலி 14 ஆயிரத்து 600 -ஐ எட்டியது.

இதுவரை, 2 லட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதனிடையே, ஜூன் 23 ஆம் தேதி வரை, நாடு முழுவதும் சுமார் 73 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கும் ,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக ஐ.சி. எம் ஆர் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments