தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

0 2004

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குக் கடலோர மாவட்டங்கள் தென்தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழக கடலோர மாவட்டங்கள், தென்தமிழகம், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் எனத் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்..

லட்சத் தீவு, கேரளக் கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments