தீவிரவாதக் கும்பல் கைது வழக்கில் குற்றப்பத்திரிகை..!

0 568

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி மற்றும் பயங்கரவாத அமைப்புக்கு சிம்கார்ட் உள்ளிட்டவை வாங்கி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட, 12 பேர் மீதும் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டு, தமிழகம் மற்றும் பெங்களூரில் பதுங்கியிருந்த தீவிரவாத கும்பலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய காரணத்தினால், இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமை அமைப்பிற்கு மாற்றப்பட்டது. விசாரணையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதி காஜாமைதீன் மற்றும் பயங்கரவாத அமைப்பினருக்கு, தமிழகத்தின் காஞ்சிபுரம், சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து ஒரு கும்பல் சிம்கார்டு சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, தமிழகத்தில் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அந்த தீவரவாத அமைப்புக்கு ஆயுதங்கள் சப்ளை செய்ய உடந்தையாக இருந்த, அந்த கும்பலைச் சேர்ந்த 12 பேர் மீதும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு வழக்கு பதிவு செய்தது.

இதில் பச்சையப்பன், ராஜேஷ் அப்துல் ரஹ்மான், அன்பரசன் நான்கு பேர் மோசடியாக சிம்கார்டு வாங்கி பயன்படுத்தவும் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைக்கு தமிழக ஐஎஸ்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளரான காஜா மைதினுக்கு உதவியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இவர்கள் தென்னிந்தியாவில் உள்ள காடுகளில் பதுங்கி தீவிரவாத அமைப்புகளின் அடித்தளத்தை உருவாக்கி ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டதும், ஆயுதங்கள் மற்றும் அதற்கு தேவையான பொருட்களை வாங்கியதும் அம்பலமானது.

குறிப்பாக இந்தியாவில் ஜிகாத் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டது தெரியவந்தது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சைய்யப்பன், சென்னையை சேர்ந்த ராஜேஷ், சேலத்தைச் சேர்ந்த லியாகத் அலி, அன்பரசன் உட்பட 12 பேர் மீதும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments