முழு ஊரடங்கு: முடங்கிய மதுரை..!

0 3939

மதுரையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றன. சாலைகளில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 7 நாள் முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது.

மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், மருந்துக் கடைகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவம் தொடர்பான பணிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் தவிர்த்து பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. காலை நேரத்தில் ஒரு சிலர் மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே வந்து சென்றனர்.

அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தனிநபர் இடைவெளியுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் பொருட்டு, பெரும்பாலான சாலைகளில் போலீசார் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். தீவிர வாகன சோதனை நடத்தி அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர தேவையின்றி வெளியே வருவொரின் வாகனங்களை பறிமுதல் செய்தும், வழக்கு பதிவு செய்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக மாநகரின் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

வரும் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments