காவல் உதவி ஆய்வாளர் உட்பட 7 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு

0 1930
போடி காவல் நிலையம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 7 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, காவல் நிலையம் மூடி சீல் வைக்கப்பட்டது.

போடிநாயக்கனூர் நகர் காவல் நிலையத்தை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், ஒரே நாளில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, தடுப்பு நடவடிக்கையாக காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும், அங்கு பணிபுரிந்த மற்ற காவலர்கள் மற்றும் தொற்று உறுதியான போலீசாரின் குடும்பத்தார்கள், உறவினர்களை தனிமைபடுத்திக் கொள்ளவும், பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments