ஐ.டி ஊழியர்கள் 13 லட்சத்தில் 8 லட்சம் பேர் இந்தியர்கள்; அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா ரத்து!

0 7439

அமெரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கான குறிப்பாக ஐ.டி ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஹெச்- 1 பி விசா ஜூன் 23 - ந் தேதி முதல்  முதல் ரத்து செய்ய டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. இதனால், இந்திய ஐ.டி ஊழியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். மெரிட் அடிப்படையில் மட்டுமே இனிமேல் ஹெச்- 1 பி விசாக்களை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

புதிய ஹெச்1 பி விசா அடிப்படையில் அமெரிக்காவில் இல்லாத அதிக திறன் கொண்ட அதிக சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். குறைந்த சம்பளம் வழங்கலாம் என்ற எண்ணத்தில் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பறித்து மற்ற வெளிநாட்டினரையும் அமெரிக்காவில் இனி பணியில் அமர்த்த முடியாது. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி கூறுகையில், ''கடந்த ஆண்டு 85,000 ஹெச்- 1 பி விசாக்களுக்கு 2,25,000 விண்ணப்பங்கள் வந்தன. ரேண்டம் லாட்டரி குலுக்கல் அடிப்படையில் விசாக்கள் வழங்கப்பட்டன. இனிமேல், அதிக சம்பளத்தின் அடிப்படையில் அதிக திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்குவதில் முன்னுரிமை அளிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்க தொழில்துறையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் மே மாதத்துக்குள் அமெரிக்காவில்  கிட்டத்தட்ட 1.7 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2 கோடி அமெரிக்கர்கள் வேலையை இழந்துள்ளனர். இதனால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் விதத்தில் ஹெச்- 1 பி உள்ளிட்ட புதிய தொழிலாளர்கள் மசோதாவில் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார். இதன்படி, இந்த ஆண்டு இறுதி வரை, ஹெச்- 1 பி விசா வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போதுள்ள 13லட்சம் ஹெச் 1 பி விசா பெற்றவர்களில் 8 லட்சம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கெனவே இந்த விசாவை பெற்றவர்களுக்கு பிச்னையில்லை ஆனால், புதுப்பிக்க விரும்புபவர்களுக்கு பிரச்சை உள்ளது  ஹெச் - 1 பி போன்ற ஒயிட் காலர் ஜாப் தவிர்த்து ஹெச்-2பி, ஹெச் -4 மற்றும் ஜே, எல் ரக விசாக்களையும் டிரம்ப் அரசு டிசம்பர் 31-  ந் தேதி வரை ரத்து செய்துள்ளது.இதன் காரணமாக 5.25 லட்சம் பேருக்கு அமெரிக்காவில் கிடைக்கவிருந்த வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது. 

வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் வாக்குறுதி போல தற்போது ஹெச்- 1 பி விசாவை டிரம்ப் ரத்து செய்துள்ளார். அதே வேளையில், கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளைச் செய்யும் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரத் துறையினருக்கும், ஈபி -5 குடியுரிமை திட்டத்தின் கீழ் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments