பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் மூவருக்கு கொரோனா உறுதி

0 2612
அறிகுறிகள் இன்றி நோய்த்தொற்று உறுதியானதாக அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதையொட்டி, பாகிஸ்தான் அணி வீரர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில், எந்தவித அறிகுறிகளும் இன்றி ஹைதர் அலி, சதாப் கான் மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோருக்கு, கொரோனா தொற்று உறுதியானதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் சில வீரர்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயீத் அப்ரிடிக்கு, கொரோனா தொற்று உறுதியானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments