டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சாதாரண வார்டுக்கு மாற்றம்

0 507

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

கடுமையான காய்ச்சல் மற்றும் உடலில் ஆக்சிஜன் செறிவுக் குறைவால் டெல்லி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 17-ஆம் தேதி கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவருக்கு மூச்சுத் திணறல் அதிகரித்ததால் டெல்லி மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் குறைந்து உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சுவாசக்கருவி அகற்றப்பட்டு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments