பூரி ரத யாத்திரையை நடத்துவது பற்றி ஒடிசா அரசு தீர்மானிக்கலாம் - உச்சநீதிமன்றம்

0 1225
பூரி ரத யாத்திரை- ஒடிசா அரசு தீர்மானிக்கலாம்

நாளை துவங்க வேண்டிய பாரம்பரியமான பூரி ரத யாத்திரையை நடத்துவது பற்றி ஒடிசா அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக இந்த முறை பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரையை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் கடந்த 18 ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கலான மனுக்களை  தலைமை நீதிபதி எஸ் ஏ போப்டே அமர்வு காணொலி வாயிலாக விசாரித்தது. அப்போது, ஆலய நிர்வாகிகளுடன் இணைந்து சுமுகமான முறையில் ரத யாத்திரையை நடத்திக் கொள்வதாக ஒடிசா அரசு உறுதி அளித்தது.

இந்த முறை ஜெகந்நாதர் வெளியே வரவில்லை என்றால் அவர் மீண்டும் வெளிவர 12 ஆண்டுகள் ஆகும் என மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.கொரோனா அறிகுறிகள் இல்லாத பக்தர்களும், ஆலய நிர்வாகிகளும் மட்டுமே அதில் பங்கேற்பர் என அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments