இந்தியா-சீனா போர் வந்தால் என்னவாகும்?

0 12975

இந்தியா மற்றும் சீனாவிடம் இருக்கும் அணுஆயுதம்,  முப்படைத் திறன் குறித்தும், ஒருவேளை இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் என்னவாகும் என்பது பற்றியும், பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்து நிபுணர் ஒருவர் வெளியிட்ட தகவல்களை பார்க்கலாம்.

இந்தியாவிலும் சீனாவிலும் சேர்த்து மொத்தம் 270 கோடி பேர் உள்ளனர். இந்த நாடுகளுக்கு இடையே போர் என்று வந்தால் அது இது வரை உலகம் காணாத ஒரு போராகவும், பேரழிவாகவும் இருக்கும் என கூறப்படும் நிலையில், இரு நாடுகளின் படைத்திறனை பற்றிய தகவல்களை காணலாம்...

இந்த புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது சீனா வலுவுள்ளது போல தோன்றினாலும் சீனா எளிதில் வென்று விடுமா என்றால் அது முடியாது என்பதே யாதார்த்தம். ஏனெனில்  இந்த 2 நாடுகளும் அனைத்து ஆயுதங்களை வைத்துக் கொண்டு நேருக்கு நேர் மோதுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படும் நிலையில், அதில் பல தந்திரங்கள் மற்றும் உத்திகளே முக்கியத்துவம் பெறும்.

ஒருவேளை சீனா இந்தியாவில் ஊடுருவினால், அது தோற்கடிக்கப்படும் நிலை உருவாகும். அதே போல் இந்தியாவும் சீனாவில் ஊடுருவினாலும் அதே நிலை தான் உருவாகும்.

சீனா நிலத்தின் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வேண்டுமென்றால், இமாலயத்தை கடந்து வர வேண்டும். ஆனால் மலைச்சிகரங்களில் இந்தியா நிறுத்தி வைத்துள்ள பீரங்கிகளின் குண்டுகளை சமாளித்து சீனாவின் கனரக ஆயுத டாங்குகள் முன்னேறுவது கடினமாகும்.

கடல் வழியாக ஊடுருவ வேண்டுமானால், மலாக்கா ஜலசந்தி வழியாகவே சீன விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் வர முடியும். ஆனால், அதற்கு அருகே உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைகளும், இந்திய போர்க்கப்பல்களும், அவற்றுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.

வலுவான விமானப்படையை வைத்துள்ள இந்தியாவிடம் தரையில் இருந்து விண்ணுக்கு ஏவும் ஏவுகணைகளும் இருப்பதால், சீன போர் விமானங்களால் இந்தியாவுக்குள் ஊடுருவ முடியாது.

கடைசியாக இருப்பது அணு ஆயுத போர் மட்டுமே. இரண்டு நாடுகளிடமும் ஆணு ஆயுதங்கள் இருக்கின்றன. இந்தியா தனது அக்னி-5 ஏவுகணைகள் வாயிலாகவும், சீனா DF 41 ஏவுகணை மூலமும் அவற்றை பயன்படுத்தினால், ஆயிரக்கணக்கான ஆண்டு நாகரீக பாரம்பரியமுள்ள இந்தியாவும் சீனாவும், மீண்டு வராத அளவுக்கு முழுமையாக அழிந்து விட வாய்ப்புள்ளதால் ஆணு ஆயுதப் போரில் இரு நாடுகளும் ஈடுபடாது என்றே கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments