டெல்லியில் தொடர்ந்து 3வது நாளாக 3000 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 728

தலைநகர் டெல்லியில் 3வது நாளாக நேற்று ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளனது.

நேற்று மட்டும் வைரஸ் தாக்கத்தினால் டெல்லியில் 63 பேர் உயிரிழந்ததால் இதுவரை பெருந்தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வைரஸிலிருந்து மீட்கப்பட்ட மொத்த மக்கள் தொகை 33 ஆயிரத்து 13 ஆக உள்ளது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்டது. அப்போது டெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments