சீனாவுக்குப் பதிலடி கொடுக்கப் பல வழிகள் உள்ளன - அமைச்சர் வி.கே.சிங்

0 4770

சீனாவுக்குப் பொருளாதார ரீதியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், இறுதியாகத்தான் போரைக் கையில் எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கில் சீன - இந்தியப் படையினர் மோதிக்கொண்டதால் எழுந்துள்ள பதற்றமான சூழல் குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சரும் ராணுவத்தின் முன்னாள் தளபதியுமான வி.கே.சிங் ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் சீனாவுக்குப் பதிலடி கொடுக்கப் பல வழிகள் உள்ளதாகவும், சீனப் பொருட்களைப் புறக்கணித்துப் பொருளாதார ரீதியில் பதிலடி கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து வழிகளும் பயனின்றித் தோல்வியடையும்போது இறுதி முயற்சியாகத்தான் போரைக் கையில் எடுக்க வேண்டும் என்றும் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments