புதிய உச்சம் தொட்ட கொரோனா.. மேலும் 15,413 பேருக்கு பாதிப்பு..!

0 6042

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அத்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 13 ஆயிரத்து 254ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 15,413 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 306 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 461ஆகவும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 254ஆகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 69 ஆயிரத்து 451 பேர் சிகிச்சை பெறும் நிலையில், மருத்துவ சிகிச்சையில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 756 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் அத்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 205ஆக அதிகரித்துள்ளது. அத்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்து 984ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 845ஆகவும், டெல்லியில் 56 ஆயிரத்து 746ஆகவும், குஜராத்தில் 26 ஆயிரத்து 680ஆகவும் அதிகரித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் 16 ஆயிரத்தையும், ராஜஸ்தானில் 14 ஆயிரத்தையும், மேற்குவங்கத்தில் 13 ஆயிரத்தையும், மத்திய பிரதேசத்தில் 11 ஆயிரத்தையும், ஹரியானாவில் 10 ஆயிரத்தையும் கொரோனா பாதிப்பு தாண்டியுள்ளது. இதேபோல் மற்ற மாநிலங்களிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments