பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ரஷ்யா பயணம்

0 3930

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக நாளை ரஷ்யா செல்கிறார். 2ம் உலகப் போரில் ஜெர்மனியை ரஷ்யா வெற்றி கொண்ட 75வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெற்றி விழாவை ரஷ்யா முன்னெடுத்துள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இதே விழாவில் சீனாவும் பங்கேற்க உள்ளதாகவும், ஆனால் இந்தியா, சீனா இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கப்போவதில்லை என்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜய்சிங்கும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments