பட்டப்பகலில் தொழிலதிபரை காரில் கடத்திய மர்ம கும்பல்..!

0 1416

குஜராத்தில் பட்டப்பகலில் தொழில் அதிபர் ஒருவரை 3பேர் கொண்ட கும்பல் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. சூரத் அருகே வெசு பகுதியைச் சேர்ந்தவர் கல்பேஷ் போசமையா.

தொழில் அதிபரான இவர் நேற்று பகலில் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது 3பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கு வந்துள்ளது. பின்னர் அந்த கும்பல் திடீரென அவரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று தயாராக இருந்த காரில் ஏற்றி அங்கிருந்து தப்பிச் சென்றது. இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக உம்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து 3பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments