சென்னை பெருநகர காவல் எல்லை பகுதியில் எவ்வித தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு நாளை முழுமையாக அமல்

0 1576

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி, முழு ஊரடங்கு அமலப்படுத்தப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்து வதற்காக அறிவிக் கப்பட்டு உள்ள 12 நாள் முழு ஊரடங்கு, தற்போது அமலில் உள்ளது.  2ஆவது நாளான சனிக்கிழமை வீடுகளுக்குள் முடங்கிய மக்கள், அரசுக்கு, 100 சதவீதம் ஒத்துழைப்பு அளித்தனர். இதற்கு மத்தியில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை எந்த கடைகளும் திறந்திருக்காது.

மருந்து கடைகள் - மருத்துவமனைகள் மட்டும் திறந்திருக்கும். எனவே, பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு, மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது. 

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நள்ளிரவு முதல், ஒருநாள் மட்டும், எவ்வித தளர்வுகளும் இன்றி அமலுக்கு வரும் முழு ஊரடங்குக்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு, மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மாநகரில் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்த பின்செய்தியாளர்களி டம் பேசிய அவர், அத்தியாவசிய பணிகள் தவிர, முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

கடந்த 2 நாட்களில் மட்டும் 6,421 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், முக கவசம் அணியாதது, தனிநபர் இடைவெளியை கடை பிடிக்காதது உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக சுமார் 4,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜிப்மர் தேர்வு உள்பட எந்தவொரு நுழைவு தேர்வுகளிலும் பங்கேற்கும் மாணவ - மாணவிகளின் ஹால் டிக்கெட்டுகளை இ- பாஸாக கருதி, அனுமதிக்கப்படும் என்றும் ஏ.கே.விஸ்வாதன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments