மாத்திரை விலை ரூ.103 ; நான்கு நாள்களில் நல்ல ரிசல்ட்! கிளென்மார்க் ஃபேவிஃபிராவிர் மருந்துக்கு ஒப்புதல்!

0 36285

மும்பையை சேர்ந்த கிளென்மார்க் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம், கோவிட்டுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளது. இதற்கான, உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (Drugs Controller General of India (DCGI).நேற்று வழங்கியுள்ளது.

ஃபேபி ப்ளு என்ற பிராண்டின் கீழ் ஃபேவிஃபிராவிர் என்ற மாத்திரையை கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ. 103 ஆகும். முதல் நாள் மட்டும் நோயாளிகள் 1800 மி.கி. மாத்திரை இரு வேளை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த 13  நாள்களுக்கு தினமும் 800 மி.கி மாத்திரை இரண்டு எடுத்துக் கொண்டால் போதுமானது. ஃபேவிஃபிராவிர் மாத்திரையை சர்க்கரை நோய், ஹைபர்டென்ஷன் உள்ள கோவிட் நோயாளிகளுக்கும் கொடுக்கலாம். இந்த மருந்துக்கு "அவசரகால பயன்பாடு " என்பதன்  கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  நோயாளிகளின் முழு ஒப்புதலை கையொப்பம் வாயிலாக பெற்ற பிறகே, அவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும்.  கொரோனா முற்றியுள்ள நோயாளிகளுக்கு ஃபேவிஃபிராவிர் மற்றும் யூமிஃபெனோவிர் என்ற இரு மருந்துகளை பயன்படுத்தி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இந்த நிறுவனம்  ஈடுபட்டு வருகிறது.

கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனத்தின் தலைவர் கிளென் சல்தானா கூறுகையில், '' இந்திய சுகாதாரத்துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தம் உள்ளது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், இந்த அனுமதி கிடைத்திருப்பது ஆறுதலை தருகிறது. நான்கு நாள்களுக்குள் நோயாளிகளின் உடலில் அதிக முன்னேற்றத்தை காண முடியும். நோயாளிகளுக்கு நிச்சயம் இது பயனுள்ள சிகிச்சை ஆகும். இந்தியாவில் நோயாளிகளுக்கு மிகவும் தேவையான மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கும் வகையில், இந்த மருந்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. லேசான மற்றும் மிதமான கோவிட் பாதிப்புள்ளவர்களிடத்தில் இந்த மருந்தை கொடுத்து பார்த்ததில் 88 சதவிகிதம் வரை வெற்றி கிடைத்துள்ளது . இது வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து. இதனால், நரம்புகள் வழியாக கொடுக்கப்படும் சிகிச்சையை காட்டிலும் எளிதானதாக இருக்கும். நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்தை விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக அரசுகளுடன் இணைந்து கிளென்மார்கன் நிறுவனம் வேகமாக செயல்படும்'' என்றார்.

ஜப்பானின் ஃபியூஜிஃபிலிம்ஸ் ஹோல்டிங் நிறுவனமும் அவிகான் என்ற பிராண்ட் பெயரில் ஃபேபிஃபிராவிர் மருந்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments