சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் இன்று இரவு முதல் சாத்தப்படுகிறது

0 2339

நாளை சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை இன்று இரவு முதல் சாத்தப்படுகிறது. நாளை காலை 10.18 முதல் 13.38 வரை நடைபெறும் சூரிய கிரகணத்தை இந்தியாவின் சில இடங்களில் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று இரவு 8.30 மணிக்கு மேல் ஏகாந்த சேவை முடிந்த பின் கோவில் நடை சாத்தப்படுகிறது. நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகளும் அதனைத் தொடர்ந்து சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளும் நடைபெறும்.

நாளை முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அன்னதான பிரசாதங்கள், தலைமுடி காணிக்கை கூடங்களும் செயல்படாது என்றும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments