'நவம்பரில் திருமணம், புது பங்களா வாங்க திட்டம்' - சுசாந்த் சிங் தற்கொலை குறித்து போலீஸ் விசாரணையில் ரியா தகவல்

0 4650
ரியா, சுசாந்த்

பாலிவுட் நடிகர் சுசாந்த்சிங் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரின், தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. சுசாந்த்சிங்குக்கும் பாலிவுட் நடிகை ரியா சக்ரபார்த்திக்கும் காதல் இருந்ததாகவும் பாந்திராவில் சுசாந்த்சிங்கின் வீட்டில் லிவிங் டுகெதராக வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டது. இருவருக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டதால், ரியா கோபித்துக் கொண்டு தன் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில்தான், சுசாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து, பாந்திரா போலீஸ் நிலையத்துக்கு நேற்று ரியாவை வரவழைத்த போலீஸார் அவரிடத்தில் 9 ணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ரியா கூறியதாவது, '' நானும் சுசாந்தும் பாந்திராவில் உள்ள வீட்டில் சேர்ந்து வாழ்ந்தோம். நவம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தோம். திருமணத்துக்கு பிறகு, புது வீடு வாங்கி குடிபோகும் திட்டம் இருந்தது. லாக்டௌன் காலத்தில் பாந்திரா வீட்டில்தான் இருந்தோம். எங்களுக்குள் சண்டை ஏற்பட்டதால், கார்ட்டர் ரோடில் உள்ள என் வீட்டுக்கு சென்று விட்டேன். ஆனாலும்,சுசாந்துடன் போனில் பேசிக் கொண்டுதான் இருந்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.

விசாரணையின் போது, தன் செல்போனை போலீஸாரிடத்தில் ரியா கொடுத்தார். இருவருக்குள்ளும் பகிரப்பட்ட விஷயங்களை போலீஸார் ஆய்வு செய்தனர். சுசாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு , ரியாவிடத்தில் இரண்டாவது முறையாக போலீஸார் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். இவர், தவிர 10க்கும் மேற்பட்டவர்களிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுசாந்த் தற்கொலைக்கு பிறகு அவரின் உடல் மும்பை ஜூகுவில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு சென்ற ரியா, சுசாந்தின் உடலை பார்த்து விட்டு கனத்த இதயத்துடன் திரும்பி சென்றார். ஆனால், சுசாந்த் சிங்கின் இறதிச்சடங்கில் ரியா பங்கேற்கவில்லை.

தில்வாலே துல்ஹாகியா லே ஜாயங்கே, தில் தோ பாஹல் ஹே போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த.பாலிவுட்டின் பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸில் நடிக்க சுசாந்த்சிங்குக்கு மூன்று வாய்ப்புகள் கிடைத்தன. இந்த ஒப்பந்தங்கள் குறித்தும் ரியாவிடத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சுதேஷி ரோமன்ஸ் மற்றும் டிடெக்டிவ் பியாம்கேஷ் பக்ஷி ஆகிய படங்களில் சுசாந்த் நடித்துள்ளார். அடுத்த படமாக சேகர் கபூர் இயக்கத்தில் பாணி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த ஒப்பந்தத்தை யாஷ்ராஜ் பிலிம்ஸ் ரத்து செய்தது. விசாரணையின் அடுத்த நகர்வாக யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவன அதிகாரிகளை விசாரிக்க மும்பை போலீஸ் திட்டமிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments