ஜம்மு-காஷ்மீருக்குள் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட உளவு பார்க்கும் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

0 1711

ஜம்மு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்காக ஆயுதங்கள் விநியோகிக்க பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட டிரோனை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.

கதுவா மாவட்டம் பன்சார் பகுதிக்குட்பட்ட இடங்களில் எல்லை பாதுகாப்பு படையினர்   இன்று அதிகாலை ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது,  இந்திய பகுதிக்குள் 250 மீட்டர் தூரம் ஊடுருவிய டிரோனை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 9 ரவுன்டுகள் வரை துப்பாக்கியால் சுட்டு , அதை வீழ்த்தினர்.  8 அடி அகலம் (8-feet wide from blade-to-blade) கொண்ட அந்த டிரோனில் நடத்தப்பட்ட சோதனையில், அமெரிக்க தயாரிப்பு எம்.4 ரைபிள் (M4 rifle) துப்பாக்கி,  துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய 2 மேகஜின்ஸ், வெடி மருந்து இருந்ததை (An American-origin M4 rifle, two magazines and ammunition) கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அலி பாய் என்ற பயங்கரவாதிக்கு அந்த ஆயுதங்கள் அனுப்பப்பட்டிருப்பது, அதில் அவனது பெயர் எழுதபட்டிருந்தது மூலம் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments