மேலும் 14,516 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 3.95 லட்சத்தை தாண்டியது..!

0 1960

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், அத்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 948ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 14 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் 24 மணி நேரத்தில் 375 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்து 48ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 12 ஆயிரத்து 948ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 68 ஆயிரத்து 269 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர்த்து, அத்தொற்றிலிருந்து மருத்துவ சிகிச்சையில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 831 பேர் குணமாகியுள்ளனர்.

நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 331ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 893ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 449ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 666ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 116ஆகவும், குஜராத்தில் 26 ஆயிரத்து 141ஆகவும், உத்தர பிரதேசத்தில் 15 ஆயிரத்து 785ஆகவும், ராஜஸ்தானில் 14 ஆயிரத்து 156ஆகவும், மேற்குவங்கத்தில் 13 ஆயிரத்து 90ஆகவும், மத்திய பிரதேசத்தில் 11 ஆயிரத்து 582ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் அந்த மாநிலங்களில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments