உலக சுகாதார நிறுவனத்திடம் கொரோனா வைரசின் மரபியல் வரிசையை அளித்தது சீனா

0 6125

பெய்ஜிங்கில் இந்த மாத துவக்கத்தில் பரவத் துவங்கிய கொரோனா வைரசின் 3 ரகங்களின் மரபணு வரிசைத் தொகுப்பை சீனா வெளியிட்டுள்ளது.

சீனாவில் ஊகான் நகரில் துவங்கிய கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், பெய்ஜிங்கில் உள்ள பெரிய சந்தை ஒன்றில் இருந்து மீண்டும் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த தொற்றை 3 ரக வைரசுகள் பரப்புவதை கண்டுபிடித்துள்ள சீனா அவற்றின் மரபியல் கூறுகளையும் வரிசைப்படுத்தி உலக சுகாதார நிறுவனத்திடம் வழங்கி உள்ளது.

இதில் ஒரு ரக வைரசின் மரபணு வரிசை ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்ட வைரசின் அமைப்பை போல இருப்பதாகவும் சீனா கூறியுள்ளது. இந்த வைரசுகள் மூக்கு மற்றும் வாயில் இருந்து வெளிப்படும் திரவங்கள் வாயிலாக மட்டுமே பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமைக்காத அல்லது அறைகுறையாக சமைக்கப்பட்ட மாமிசங்களை உண்ண வேண்டாம் என சீன நோய் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments