ராணுவ வீரர்களுக்கு உடல் பாதுகாப்பு கவச ஆடைகளையும், பிரம்புத் தடிகளையும் வழங்க ஏற்பாடு

0 3206

கிழக்கு லடாக் கட்டுப்பாட்டு எல்லையில் காவல் பணி புரியும் ராணுவ வீரர்களுக்கு, உடல் பாதுகாப்பு கவச ஆடைகளையும், பிரம்புத் தடிகளையும்  வழங்குவதற்கான ஏற்பாடுகளை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது.

எல்லையில் உள்ள சீன துருப்புக்கள் கற்கள், இரும்புத் தடி, ஆணிகள் அறையப்பட்ட கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தி மோதல் நேரங்களில் நமது வீரர்களை தாக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த 15ஆம் தேதியும் இதே பாணியில் சீன துருப்புக்கள் நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

கடந்த மாதம் 5, 6 ஆம் தேதிகளில் பாங்கோங் ஏரிக்கரையில் சீன ராணுவம் இதே போன்று நடத்திய தாக்குதலில் கர்னல் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள நிறுவனம் ஒன்றிடம் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கான எடை குறைந்த 2000 உடல் கவச ஆடைகளை தயாரித்து வழங்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதில் 500 ஆடைகள் விரைவில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments