வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவர்? மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

0 1403

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என விளக்கம் அளிக்க மத்திய அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தொடுத்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களில் நாடு திரும்ப விரும்பியோரின் 26 ஆயிரத்து 368 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு சார்பல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்துச் சொந்த ஊர் திரும்ப விண்ணப்பித்துள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments