தேசத்தை உலுக்கும் கொரோனா.. திணறும் மாநிலங்கள்.!

0 2403

நாடு முழுவதும் இதுவரை, சுமார் 62 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக ஐ.சி.எம்.ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வந்த போதிலும், ஒரு லட்சத்து 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். 

உலக நாடுகளை கொரோனா உலுக்கி வரும் நிலையில், இந்தியாவிலும் வைரஸ் தொற்று பாதிப்பு, உச்சம் எட்டி உள்ளது.

மஹாராஷ்டிராவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.

தமிழகம், இந்த பட்டியலில் தொடர்ந்து, 2- வது இடம் வகிக்கிறது.

டெல்லியில், கொரோனா பாதிப்பு 47 ஆயிரத்தையும், குஜராத்தில் 25 ஆயிரத்தை தாண்டி விட்டது.

உத்தரபிரதேசத்தில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், ராஜஸ்தானில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தையும்,
மத்திய பிரதேசத்தில் 11 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது.

ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா தெலங்கானா மற்றும் கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்தது.

இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்
ஆறுதல் அளிக்கும் வகையில், சுமார் ஒரு லட்சத்து 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஐ. சி . எம். ஆர் வெளியிட்ட ஓர் அறிவிப்பில், கடந்த 17 ஆம் தேதி வரை, நாடு முழுவதும் 62 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 68 ஆயிரத்தை தாண்ட, கொரோனா உயிர்ப் பலி 12 ஆயிரத்து 275 -ஐ எட்டி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments