அத்துமீறினால் திருப்பி அடிப்போம்.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!

0 9313

இந்தியா எப்போதும் அமைதியையே விரும்பினாலும், அத்துமீறினால் திருப்பி அடிக்க தயங்காது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஊரடங்கு நிலவரம் குறித்து தொடர்ந்து 2வது நாளாக முதலமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, லடாக் எல்லையில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார். அவருடன் சேர்ந்து ஆலோசனையில் பங்கேற்ற முதலமைச்சர்களும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக பேசிய பிரதமர் மோடி, லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது எனவும், வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் தெரிவித்தார்.

இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புவதாக தெரிவித்த பிரதமர், அத்துமீறினால் திருப்பி அடிக்க தயங்கப்போவது இல்லை எனவும் எச்சரித்தார்.

ஆத்திரமூட்டினால் பதில் நடவடிக்கைகளில் ஈடுபட இந்தியா ஒரு போதும் தயங்காது எனவும், இந்தியாவை கோபப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் கடுமையாக எச்சரித்த பிரதமர் மோடி, இந்தியாவின் துணிச்சல் மற்றும் வீரத்தை பற்றி உலகிற்கே தெரியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எல்லையை காக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்திருப்பதாகவும், ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் கூறிய அவர், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையான்மை தான் மிகப்பெரிய பலம் என்றும், ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் சக்தி இந்தியாவிற்கு உண்டு என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments