இந்திய வீரர்கள் மேலும் 4 பேர் கவலைக்கிடம்

0 4884

லடாக் எல்லையிலுள்ள கால்வான் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இதுவரை இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்துள்ள நிலையில், மேலும் 4 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திங்களன்று இரவு படைகளை திரும்பப் பெறும் செயல்முறையின் போது இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கைகலப்பு மற்றும், கட்டைகள், கற்களை கொண்டு தாக்கிக் கொண்டதில் இருதரப்பிலுமே வீரர்கள் காயமடைந்தனர்.

மோதலின் போது சீன ராணுவத்தினர் இரும்புக் கம்பிகள் மற்றும் ஆணிகள் பொருத்தப்பட்ட கட்டைகளை கொண்டு தாக்கியதாகவும், நள்ளிரவு வரை இந்த மோதல் நீடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு அதிகாரி, 2 வீரர்கள் என மொத்தம் 3 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை மேலும் 17 பேர் உயிரிழந்ததாகவும், மைனஸ் டிகிரி வெப்பநிலை உள்ள சூழலில் எல்லையை காக்க இந்திய வீரர்கள் போராடியதாகவும் இந்திய ராணுவம் அறிவித்தது.

இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ள நிலையில், மேலும் 4 வீரர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் இந்திய வீரர்களின் பதிலடி தாக்குதலில் சீன வீரர்கள் 43 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் அல்லது படுகாயமடைந்திருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அவர்களில் சீனாவின் கமாண்டர் நிலை அதிகாரி ஒருவரும் அடக்கம் என்று கூறப்படுகிறது. சீன ராணுவம் தரப்பில் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டாலும் எத்தனை பேர் என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

1967ம் ஆண்டுக்கு பின்னர் 53 ஆண்டுகளில் சீனா - இந்தியாவுக்கு இடையே உயிரிழப்புகள் ஏற்படும் அளவுக்கு நடைபெற்ற முதல் மோதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments