கொரோனாவை வைத்து அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

0 1753

கொரோனா பரவும் சூழலில் அந்த நோயை வைத்து அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ உட்கட்டமைப்பில் மிகவும் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், இஸ்ரேல், இத்தாலி போன்றவையே ஆச்சரியப்படும் விதத்தில் கொரோனாவுக்கு எதிராக இந்திய தேசம் இடையறாது போராடி வருகிறது என்று கூறியுள்ளார்.

அதிலும் கொரோனாவை குணப்படுத்துவதிலும், கொரோனாவினாலான மரண சதவீதத்தை உலகிலேயே குறைவான சதவீதத்திற்குள் நிறுத்தியதிலும் தமிழக அரசின் பணிகள் பாராட்டப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளுக்கும் மாறாக கொரோனாவிலும் அரசியல் செய்து மக்களை குழப்பும் பணிகளை திமுக நிறுத்த வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments