தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் 306 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்

0 1261

தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் 306 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

மே 31 ஆம் தேதி வரையில் தமிழகத்தில் 22333 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 1 - 15 ஆம் தேதி வரையிலான 15 நாட்களில் மட்டும் 24171 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 

மே 31 ஆம் தேதி வரை சென்னையில் 15146 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15 நாட்களில் மட்டும் 18098 பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

மே 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக இருந்த நிலையில், கடந்த 15 நாட்களில் மட்டும் 306 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் 253 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 15 நாட்களின் நிலைமையை கருத்தில் கொண்டே சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கை  அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments