பக்கத்து வீட்டுக்காரரின் கட்டுமானப் பணிகளுக்கு ஒரு நாள் முழுவதும் கல் சுமந்து உதவிய அமைச்சர்

0 1377

மிசோரம் மாநிலத்தில் பக்கத்து வீட்டுக்காரரின் கட்டுமானப் பணிகளுக்கு உதவும் வகையில், அமைச்சர் ஒருவர் நாள் முழுவதும் கல் சுமந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிட் வெங் பகுதியில் லால்ங்கில்க்ளோவா ((Lalnghilhlova)) என்பவர், சிதிலமடைந்த தனது வீட்டை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கடந்த 9ம் தேதி முதல் அம்மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பணியாளர்கள் கிடைக்கவில்லை.

இந்த சமயத்தில் தான் விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்ட் ((Robert Romawia Royte)) தனது பக்கத்துவீட்டுக் காரருக்கு உதவ முன்வந்துள்ளார்.

மலைப்பாங்கான பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு, அங்கிருந்து 60 மீட்டர் தூரத்தில் தாழ்வான பகுதியில் கொட்டப்பட்டிருந்த கற்களை 53 வயதான அமைச்சர் ராபர்ட் நாள் முழுவதும் எளிதாக தூக்கி வந்துள்ளார். அமைச்சர் ஒருவர் நாள் முழுவதும் கட்டுமான பணியாளராக வேலை பார்த்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments