மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவது குறித்து பிரதமர் மோடி பொதுமக்களிடம் யோசனை

0 663

மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவது குறித்து பிரதமர் மோடி பொதுமக்களிடம் யோசனை கேட்கிறார். 

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம்  நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.அடுத்த நிகழ்ச்சி, வருகிற 28-ந் தேதி ஒலிபரப்பாகிறது.

இதில், தான் என்ன பேசவேண்டும் என்று தாங்கள் விரும்பும் விஷயங்களை தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மோடி விடுத்துள்ள அழைப்பில், மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு இன்னும் 2 வாரங்கள் இருந்தாலும், மக்களின் யோசனைகள் மற்றும் கருத்துக்களை வரவேற்பதாக என்று குறிப்பிட்டுள்ளார்.

மை கவ்’(Mygov) இணையதளத்திலோ, 1800117800 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி மூலமோ, அல்லது இந்தி, ஆங்கிலத்தில் பேசி பதிவு செய்த செய்திகளையோ அனுப்பலாம் என்றும் அந்த குரல் பதிவுகள் கூட தமது ஒலிபரப்பில் இடம்பெறும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments