வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற பினராயி விஜயன் மகள் திருமணம்!

0 16131

கொரோனா நோய்த் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கு இந்திய ஜனநாய வாலிபர் சங்க மாநிலத் தலைவர் பி.ஏ.மொஹம்மத் ரியாஸுக்கும் திருவனந்தபுரத்தில் இன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் இல்லத்தில் நடைபெற்ற எளிமையான திருமண விழாவில் மிகவும் நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். உறவினர்களைத் தவிர்த்து கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன், மாநில சிபிஎம் உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் சஜீஷ் உள்ளிட்டோர் இந்தத் திருமண விழாவில் பங்கேற்றார்கள்.

image

மணமகன் மொஹம்மது ரியாஸ் ஓய்வு பெட்ரா ஐபிஎஸ் அதிகாரி பி.எம் அப்துல் காதரின் மகனாவார். மாணவராக இருந்த போதே அரசியலில் நுழைந்து சி.பி.ஐ.(எம்) - ன் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐயின் முன்னாள் தேசிய இணைச் செயலாளராக இருந்த ரியாஸ், கடந்த பிப்ரவரி 2017 இல் DYFI- ன் தலைவராக நியமிக்கப்பட்டார். 2009 நாடாளுமன்ற தேர்தலில் கோழிக்கூடு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் தலைவர் எம்.கே.ராகவனிடம் தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல, தொழில்முனைவோரான வீணா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மணமகன் மொஹம்மது ரியாஸுக்கும் மணமகள் வீணாவுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments