முதல் 8 வார கால ஊரடங்கினால் ஏற்பட்ட பலன்கள் குறித்த ஆய்வு தகவல்

0 2817

முதல் 8 வார கால ஊரடங்கால், கொரோனா உச்சநிலையை அடைவது, நவம்பருக்கு தள்ளிப் போடப்பட்டதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

கொரோனா தொற்று உச்சநிலையை அடைவது, 34 முதல் 76 நாட்கள் தள்ளிப்போடப்பட்டிருப்பதாகவும், 8 வார கால ஊரடங்கின் முடிவில் 69 முதல் 97 சதவீதம் வரை தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் ஐசிஎம்ஆர் கூறுகிறது.

குறைந்தது 60 சதவீதம் அளவுக்கு பயனளிக்கும் வகையில், பொது சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, நோய்த்தொற்று எண்ணிக்கையை கொரோனா உச்சத்தில் இருக்கும்போது 70 சதவீதம் அளவுக்கும், மொத்தத்தில் 26.6 சதவீதம் அளவுக்கும் குறைக்கும் என அந்த ஆய்வு கூறுகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்களின் தேவையை 83 சதவீதம் அளவுக்கும் குறைக்கும் என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments