தெலங்கானாவில் நேற்று ஒரேநாளில் 23 பத்திரிகையாளர்கள் உள்பட237 பேருக்கு பாதிப்பு

0 962

தெலங்கானா மாநிலத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 237 பேரில் 23 பேர் பத்திரிகையாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்ததால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து 2 வது நாளாக 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஒரே நாளில் 23 பத்திரிகையாளர்கள் தொற்றினால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளகளின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானா தலைமைச் செயலகத்திற்குள் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments