இந்தியா அமைதி மற்றும் அகிம்சையை விரும்புகிறது - நிதின் கட்கரி

0 1042

அண்டை நாடுகளுடனான தனது உறவை வழிநடத்த இந்தியா அமைதி மற்றும் அகிம்சையை மட்டுமே விரும்புவதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில பாஜகவினருடன் இணையதளம் மூலம் உரையாடிய அவர், பூட்டான் அல்லது பங்களாதேஷ் நிலத்தை இந்தியா ஒருபோதும் பறிக்க முயற்சிக்கவில்லை எனவும், பாகிஸ்தான் அல்லது சீனாவின் நிலம் இந்தியாவிற்கு வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டார்.

மாறாக, இந்தியா விரும்பும் ஒரே விஷயம் அமைதிதான் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்திய எல்லையில் சீனா மற்றும் நேபாளம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில் கட்கரி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments