பிரதமர் உதவித் தொகையை பெற 100 வயது தாயை கட்டிலில் வைத்து இழுத்துச் சென்ற 60 வயது மகள்

0 8333

பிரதமரின் ஏழைகள் நிதி உதவித் திட்ட தொகையைப் பெற 100 வயது தாயை, கட்டிலில் வைத்து வங்கிக்கு இழுத்துச் சென்ற பரிதாப சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

நவுபாரா மாவட்டம் பார்கான் என்ற கிராமத்தில் வசிக்கும்  லபே பாகல் என்ற இந்த மூதாட்டியின் ஜன்தன்  வங்கிக் கணக்கில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத கால உதவித் தொகையான 1500 ரூபாய் இருந்துள்ளது.

அதை வாங்க அவரது 60 வயதான மகள்  உள்ளூர் உத்கல் கிராம வங்கிக்கு சென்றுள்ளார்.

ஆனால் பயனாளியை நேரில் கண்டால் மட்டுமே பணம் தருவதாக வங்கி மேலாளர் கூறியதாகவும், இதை அடுத்து படுத்த படுக்கையாக இருக்கும் மூதாட்டியை, கிராமத்தின் கரடு முரடான சாலைகளில், கயிற்றுக்கட்டிலில் வைத்து மகள் தள்ளிக் கொண்டு போனதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சியுடன் கூடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments