நாம் தூங்கும் போது கொரொனா வைரசும் தூங்கி விடும் - பாக்.போதகரின் வீடியோ

0 7422

நாம் தூங்கும் போது கொரோனா வைரசும் தூங்கும், எனவே எல்லோரும் அதிக நேரம் தூங்க வேண்டும் என்ற விநோதமான யோசனையை, பாகிஸ்தானை சேர்ந்த மத போதகர் ஒருவர் வழங்கி உள்ளார்.

சமூக வலைதளங்கில் வைரலான வீடியோ ஒன்றில் அவர் இப்படி கூறியிருப்பதை நெட்டிசன்கள் கேலிக் கூத்தாக மாற்றி உள்ளனர்.

அதிக நேரம் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவதற்கு இதுவே காரணம் என தனது யோசனைக்கு காரணம் கூறும் அவர்,அப்படி தூங்கினால் கொரோனா வைரஸ் நமக்கு எந்த கெடுதலும் செய்யாது எனகூறி திகைப்பை அதிகரித்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக  நாம் இறக்கும் போது வைரசும் இறந்து விடும் எனவும் அவர் கூறுவது வீடியோவில் இடம் பெற்றுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments