இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டுத் தற்கொலை எனத் தகவல்

0 70195

இளம் இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் ((Sushant Singh Rajput)) தற்கொலை செய்து கொண்டது, திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட "எம்.எஸ். தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி" எனும் படம் 2016ஆம் ஆண்டில் வெளியானது. இப்படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் சுசாந்த் சிங் ராஜ்புத்.

34 வயதாகும் சுசாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

சுசாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட செய்தி குறித்து அறிந்து, இந்தி திரையுலகினரும், அவரது ரசிகர்களும், டுவிட்டர் உள்ள சமூக வலைதள பக்கங்களில் இரங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments