கொடூரமாக கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுவன்-காதல் ஜோடி கைது

0 3966

திருப்பூரில் 8 வயது சிறுவன் கொலை வழக்கில் காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்குளியைச் சேர்ந்த சிறுவன் பவனேஷ் வியாழக்கிழமை அன்று காணாமல் போன நிலையில், மறுநாள் காட்டுப்பகுதியில் உடலில் காயங்களுடன் அவனது சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார் சிறுவனின் வீட்டருகே வசித்து வரும் 11ம் வகுப்பு மாணவியையும், அஜீத்குமார் என்ற இளைஞனையும் கைது செய்தனர். இவர்கள் காதலித்து வந்துள்ள நிலையில், சம்பவத்தன்று இருவரும் நெருக்கமாக இருந்ததை பவனேஷ் பார்த்துள்ளான்.

விஷயம் வெளியே தெரிந்துவிடும் என அஞ்சி சிறுவனை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று மது பாட்டிலால் குத்தியும், கல்லால் தாக்கியும் அஜீத்குமார் கொலை செய்துள்ளான். பள்ளி மாணவி கொலைக்கு உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments