ரெம்டெசிவிர் மருந்து - மத்திய அரசு ஒப்புதல்

0 1826

கொரோனா பாதிப்புடையவர்களுக்கு ஆரம்ப நிலையில் ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மலேரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்துடன் ஆசித்தரோமிசின் கலந்து நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில் புதிய வழிகாட்டல்களின் படி இந்த கலப்பை மத்திய சுகாதார அமைச்சகம் நீக்கியது.

ஆரம்ப நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும் ஹைட்ரோக்சி குளோரோகுயின் தரலாம் என்றும் தொடக்க மற்றும் மிதமான தாக்கம் உடையவர்களுக்கு remdeviser பயன்படுத்தலாம் என்றும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தீவிரமான பாதிப்புடைய நோயாளிகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பரிந்துரைப்பதற்கு முன்பாக நோயாளிக்கு இ.சி.ஜி. பரிசோதனை ஒன்றை செய்து பார்த்து விடுவது நல்லது என்றும் அவசர கால பயன்பாட்டுக்கு ‘ரெம்டெசிவிர்’ பரிந்துரைக்கலாம் என்றும் கொரோனா தீவிரம் மிதமாக இருக்கிற நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கலாம் என்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments