கொரோனா சிகிச்சைக்கு ரூ,8.30 கோடி கட்டணம்-முதியவர் அதிர்ச்சி

0 10150

அமெரிக்காவின் சியாட்டல் நகரில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவருக்கு சுமார் 8 கோடியே 30 லட்ச ரூபாய், சிகிச்சை கட்டணமாக விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மைக்கேல் ஃப்ளோர் எனும் 70 வயது முதியவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 62 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், ஃப்ளோர் தனது வீட்டில் இருந்த 181 பக்கங்கள் கொண்ட மருத்துவமனை பில்லில், அவரது சிகிச்சைக்கான செலவை கண்டு அதிர்ந்து விட்டார். தனது இதயமே இரண்டாவது முறை செயலிழந்து போல இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கு கொரோனா தொற்றை தவிர வேறு எந்த உடல்நலக் கோளாறும் இல்லை என்பதால், அவரது சிகிச்சைக்கான கட்டணத்தை காப்பீடு நிறுவனமே வழங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments