உலக அளவில் ஒரே நாளில் 1.28 லட்சம் பேர் புதிதாக பாதிப்பு

0 1405

உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்து 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதால், இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 31 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 40 லட்சத்து 22 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் 54 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய்த் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் நேற்று 25 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 500ஐத் தாண்டியுள்ளது.

பிரேசிலில் நேற்று மட்டும் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விரு நாடுகளுக்கு அடுத்தபடியாக 500 பேர் இறப்புடன் மெக்ஸிகோ 3ம் இடத்திலும், 309 பேர் மரணித்ததால் இந்தியா 4ம் இடத்திலும் உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments