கேரளா- தனி விமானத்தில் வருவோருக்கு நிபந்தனை

0 1726

ஜூன் இருபதாம் தேதி முதல் மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து கேரளத்துக்குத் தனி விமானத்தில் வருவோர் கொரோனா இல்லை என்கிற சான்றிதழுடன் வர வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

அரபு நாடுகளில் தொழில், வணிகம் ஆகியவற்றை நடத்தி வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கொரோனா அச்சம் காரணமாக அங்கிருந்து தனி விமானங்களில் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர்.

கேரளத்தில் ஏற்கெனவே கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சொந்த ஊருக்குத் திரும்பி வருவோரோல் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஜூன் 20 முதல் மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து கேரளத்துக்குச் தனி விமானங்களில் வருவோர் கொரோனா இல்லை என்கிற சான்றிதழுடன் வருவது கட்டாயம் என மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே ஒப்புதல் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments