கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது-மு.க.ஸ்டாலின்

0 1473

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதாக கூறப்படும் அதே நேரத்தில், பரிசோதனைகள் குறித்தும், தனிமைப்படுத்துதல் குறித்தும் முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதால்தான், சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் சிறப்புக்குழு நியமிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்துதான் சுகாதாரத்துறைச் செயலாளர் மாற்றத்திற்கான அறிவிப்பும் வெளியானதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா பரவல் எந்தளவுக்கு வேகமாக இருக்கும் என்பது குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ள ஆய்வு முடிவுகளை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments