மேற்கு வங்கத்தில் 10000-ஐக் கடந்த கொரோனா பாதிப்பு

0 647

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி மேற்குவங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 476 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்து 244 ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது.

நாலாயிரத்து 206 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். ஐயாயிரத்து 587 பேர் நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் பத்தாயிரத்தைக் கடந்த எட்டாவது மாநிலமாக மேற்குவங்கம் உள்ளது. ஏற்கெனவே மகாராஷ்டிரம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகியன பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments