கொரோனா பாதிப்பு புதிய உச்சம்.. மேலும் 11,458 பேர் பாதிப்பு..!

0 3092

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், அத்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 884ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட புள்ளி விவரங்களில், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 11 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு இருப்பதாகவும், 386 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 993ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 884ஆகவும் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 779 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 1 லட்சத்து 54 ஆயிரத்து 330 பேர் சிகிச்சையில் குணமாகியுள்ளனர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து ஆயிரத்து 141ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 717ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 698ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 367ஆகவும் உள்ளது. இதையடுத்து டெல்லியில் கொரோனாவால் 36 ஆயிரத்து 824 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 214 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 500ஐயும், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 12 ஆயிரத்தையும், மேற்குவங்கம், மத்திய பிரதேசத்தில் 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

ஹரியானா, கர்நாடகா, பீகார் மாநிலங்களில் 6 ஆயிரத்தையும், ஆந்திராவில் 5 ஆயிரத்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்துள்ளது. இதேபோல் பிற மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments